திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் திருக்கோவிலில் பவித்திர உற்சவம்
பைல் படம்
திருக்கோஷ்டியூர் அருள்மிகு ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் பவித்திர உற்சவம் நிறைவு நவகலச சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, புராண சிறப்பு மிக்க பிரசித்திபெற்ற ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில், பவித்திர உச்சத்தின் நிறைவு நாளை முன்னிட்டு, நவகலச சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமர்சையாக நடைபெற்றன. முன்னதாக கோவில் மண்டபத்தில் உற்சவதெய்வங்களை எழுந்தருளச் செய்தனர். புனித நீர் அடங்கிய நவக் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தீப தூபத்துடன் கற்பூர ஆராதனை காட்டப்பட்டன.
தொடர்ந்து, யாகசாலை மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள நவகலசதிருக்கும் சிறப்பு பூஜைகள் யாகங்கள் ஹோமங்கள் நடைபெற்றன. பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் இரு தேவியர் மற்றும் சக்கரத்தாழ்வாரை எழுந்தருள செய்து, திருமஞ்சனம் பொடி, மஞ்சள், பால், பழங்கள் ஆகியவை கொண்டு அபிஷேகமும், வேதமந்திரங்கள் முழங்க நவகலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சந்தன காப்பு சாற்றப்பட்டபின் தீபாராதனைகள் காட்டப்பட்டன. தொடர்ந்து தெய்வங்களுக்கு பல்வேறு ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதனையடுத்து கும்ப தீபம் மற்றும் கற்பூர தீபம் காட்டப்பட்டு, தங்கப்பல்லக்கில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கோவில் உள்மண்டபத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu