கிராமத்தில் அட்டூழியம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடித்து அப்புறப்படுத்தவேண்டுமென வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது மு.சூரக்குடி கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இந்த பகுதியில் ஓட்டு வீடு கூரை வீடுகள்தான் அதிகம் உள்ளது .இந்த மக்கள் காலையில் வயல்வெளிக்கு வேலைக்கு சென்றால் மாலையில் தான் திரும்பி வருவார்கள்.
அந்த நேரங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளுக்கு படையெடுத்து ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி, அங்கு வைத்துள்ள உணவு பொருட்கள், அரிசி, பருப்பு போன்ற பொருள்களையும் வீட்டுக்குள் சமைத்து வைத்துள்ள உணவுகளையும் கூட தூக்கி சென்று விடுகின்றனர். அப்பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள வாழை மரம், தென்னை மரங்களையும் இந்த குரங்குகள் விட்டுவைப்பதில்லை . மின்சார, கேபிள் வயர் களையும் அறுத்துவிடுகின்றன. இந்தகுரங்குகள் விரட்ட முயற்சிக்கும் மக்களையும் கடித்து காயப்படுத்திவிடுகின்றனவாம். இதனால் குழந்தைகளை கூட வெளியில் விடமுடியாமல், கிராம மக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக வனத்துறையினர் கூண்டு வைத்து இந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu