சிங்கம்புணரி பேரூராட்சி தேர்தல் : திமுகவினர் 2 பேர் போட்டியின்றி தேர்வு

சிங்கம்புணரி பேரூராட்சி தேர்தல் :  திமுகவினர் 2 பேர் போட்டியின்றி தேர்வு
X

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சி தேர்தலில்   திமுகவினர் 2 பேர் போட்டியின்றி தேர்வு

சிங்கம்புணரி பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வார்டு எண் 1ல் 4 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அதிமுக உள்ளிட்ட மூன்று வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றதின் அடிப்படையில் திமுக வேட்பாளர் அம்பலமுத்து போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து வார்டு எண் 5ல் அதிமுக உட்பட 4 வேட்பாளர்கள் களம் இறங்கியதில் அதிமுக வேட்பாளர் உட்பட மூன்று வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் வள்ளி மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதற்கான வெற்றி சான்றிதழை சிங்கம்புணரி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி ஜான் முகமது அவர்களுக்கு வழங்கினார் தொண்டர்கள் உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!