நெற்குப்பை பேரூராட்சியில் வியாபாரியிடம் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்

நெற்குப்பை பேரூராட்சியில் வியாபாரியிடம் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்

நெற்குப்பை அருகே  பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்த பறக்கும்படையினர்

திருப்பத்தூருக்கு முட்டை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டு நாமக்கல் திரும்பி செல்லும் போது பறக்கும் படையினரால் பணம் பறிமுதல்

நெற்குப்பை பேரூராட்சியில் உரிய ஆவணமின்றி பணம் கொண்டு வந்த வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, நெற்குப்பை பேரூராட்சியில்தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு முட்டை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டு கனரக வாகனம் ஒன்று நெற்குப்பை, பொன்னமராவதி வழியாக நாமக்கல் திரும்பி செல்லும் போது பறக்கும் படையினர் அந்த வாகனத்தை சோதனையிட்டனர். அதில் இருந்த நாமக்கல் ஒத்தையூர் பகுதியைச் சேர்ந்த கந்தவேல் மகன் பழனிச்சாமியிடம் உரிய ஆவணம் இன்றி 4 லட்சத்து 83ஆயிரத்தி 600 ரூபாய் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பறக்கும் படை குழுவின் மண்டல துணை வட்டாட்சியர் மகாலிங்கம், சார்பு காவல் ஆய்வாளர் சேதுராமன், காவலர் சத்தியசீலன் ஆகியோர் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நெற்குப்பை காவல் நிலையகாவல் ஆய்வாளர் உதவியுடன் திருப்பத்தூர் கருவூலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Read MoreRead Less
Next Story