அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
அனுமதியின்றி சவுடு மண் அள்ளியதால் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர், ஜேசிபி எந்திரம்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பட்டியை சேர்ந்தவர் சேதுபதி இவர் தன்னுடைய சொந்த விவசாய இடத்தின் தனது தேவைக்காக சவுடு மண் அள்ளியதாக கூறப்படுகிறது. இன்று காலை சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசுக்கு வந்த தொலைபேசியில் அனுமதியின்றி மணல் எடுக்கப்படுவதாக புகார் கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் திருநாவுக்கரசு மேற்படி விவசாய நிலத்தில் இருந்த சவுடு மண்ணை ஜேசிபி இயந்திரம் மற்றும் 2 டிராக்டர்கள் மூலம் அள்ளுவது கண்டு உடனே 3 இயந்திரங்களையும் எஸ்.வி.மங்கலம் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சவுடு மண் அள்ளுவதற்கு அரசு அனுமதியின்றி அள்ளியதற்காக சதுர்வேதமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி பால முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu