திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் பவித்திர உற்சவ விழா

திருக்கோஷ்டியூர் அருள்மிகு ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் பவித்திர உற்சவ விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புராண சிறப்பு மிக்க மிக பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் பவித்திர உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய உற்சவங்களிலும் மற்றும் அர்ச்சனை, தினந்தோறும் நடைபெறும் பூஜைகளில் அர்ச்சகர்கள் மூலமாகவே, பணியாளர்கள், பக்தர்களால் ஏற்படும் தோஷத்திற்கு தோஷ நிவாரணம் செய்யும் விதமாக பவித்ர உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு இவ்விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது
முன்னதாக கோவில் மண்டபத்தில் உற்சவர்கள் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் இரு தேவியருடன் எழுந்தருள செய்தனர். சுவாமி முன்பு 108 கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் உற்சவ தெய்வங்களுக்கு தீப தூப ஆராதனை காட்டப்பட்டு நட்சத்திர ஆராத்தி கும்ப ஆராத்தி மற்றும் கற்பூர தீபாராதனை நடைபெற்ற உடன் அபிஷேகம் துவங்கியது.
திருமஞ்சனம் பொடி மஞ்சள் பால் மற்றும் மூலிகைப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து சௌமியநாராயணப் பெருமாள் மற்றும் இரு தேவியர் களுக்கு சந்தனம் சாட்டப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டு 108 கலசங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிறைவாக தேங்காய் விளக்கில் ஏற்றப்பட்ட தீபாராதனை காட்டப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu