கனமழையால் இடிந்த கூரை வீடு ! உயிர் தப்பிய குடும்பம்

கனமழையால் இடிந்த கூரை வீடு !  உயிர் தப்பிய குடும்பம்
X

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் மழையால் இடிந்து விழுந்த கூரை வீடு

மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய தங்கள் குடும்பத்திற்கு அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்

மருதிப்பட்டியில் கனமழையால் கூரை வீடு இடிந்து விழுந்தபோது அதிருஷ்டவசமாக அந்த வீட்டில் இல்லாத அந்த குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. ஆ.தெக்கூர் அருகேயுள்ள மருதிபட்டி கிராமத்தில் நேற்றிரவு பெய்த கன மழையினால் முத்தரையர் தெருவில் வசிக்கும் சந்திரன் என்பவரது கூரை வீடு இடிந்து விழுந்தது. குழந்தைகளுடன் குடும்பத்தினர் அனைவரும் அடுத்த வீட்டில் தங்கியிருந்ததனால் அதிருஷ்டவசமா உ.யிர் பிழைத்தனர். வீட்டிலிருந்த பீரோ, கிரைண்டர், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததால் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய தங்கள் குடும்பத்திற்கு அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேஸ்வரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கமலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!