சாலையோரம் குப்பைகள்: விபத்தை தடுக்க திருப்பத்தூர் பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா

சாலையோரம் குப்பைகள்: விபத்தை தடுக்க திருப்பத்தூர் பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா
X

திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் நீதிமன்றம் அருகே கொட்டப்படும் குப்பைகள்

இந்த குப்பைகளில் உணவைத்தேடி மாடு, நாய், பன்றிகள் சாலையின் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்

திருப்பத்தூர் பேரூராட்சி மெத்தனத்தால் தொடரும் விபத்து...நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர்- சிவகங்கை சாலையில் பணியாரேந்தல் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் அருகே மின் வாரிய துணை மின் நிலையம் மற்றும் திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது, இந்நிலையில், இந்த பணியாரேந்தல் கண்மாயில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது கண்மாய்க்குள் குப்பைகளைக் கொட்டாமல், சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளில் உணவைத்தேடி மாடு, நாய், பன்றிகள் சாலையின் குறுக்கே சென்று வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமேற்படும் நிலை தொடர்கிறது. எனவே சாலை ஓரத்திலேயே குப்பைகளை கொட்டி வருவதைத் தவிர்க்க திருப்பத்தூர் பேருராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்பகுதியில் இயங்கி வரும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!