தமிழில் வேதம் படித்தவருக்கு அர்ச்சகர் பதவி: திருப்பத்துார் கோவில் அர்ச்சகர் உருக்கம்

தமிழில் வேதம் படித்தவருக்கு அர்ச்சகர் பதவி: திருப்பத்துார் கோவில் அர்ச்சகர் உருக்கம்
X

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூவாயி அம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் இளவழகன்.

இனி அனைவரும் வேதம் படிக்க தங்களை தயார் செய்து கொள்ள இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை சேர்ந்தவர் இளவழகன். மதுரை வேதபாட பள்ளியில் வேதம் பயின்ற இவருக்கு, அர்ச்சகர் பணி கிடைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூவாயி அம்மன் கோவிலில், அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இளவழகன் தனக்கு திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் அர்ச்சகர் ஆகும் வாய்ப்பை தமிழக அரசு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வேதம் படித்து வரும் அனைத்து சமுதாயத்தினரின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி உள்ளார் முதல்வர் என்று புகழ்ந்து கூறிய அவர், இனி அனைவரும் வேதம் படிக்க தங்களை தயார் செய்து கொள்ள இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இளவழகன் தமிழில் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் காட்சி, கோயிலுக்கு வரும் பக்தர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுவரை சமஸ்கிருதத்தில் புரியாமல் கேட்ட வேதத்தை இனிய தமிழில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story