தேவையில்லாத குழப்பத்தை அரசு உண்டாக்குகிறது -ஆதிசைவ சிவாச்சாரியார்கள்

தேவையில்லாத குழப்பத்தை அரசு உண்டாக்குகிறது  -ஆதிசைவ சிவாச்சாரியார்கள்
X
பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எங்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள் -ஆதிசைவ சிவாச்சாரியார்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிவாச்சார்யர்களுக்கு ஏற்பட்ட இன்னல் நீங்கவும் பிள்ளையார்பட்டி சிவநெறிக் கழகத்தில் உள்ள வேத பாடசாலையில் ஆதிசைவ சி்வாச்சார்யர்கள் 1008 அவர்த்தி கணபதி மந்திர பாராயணம் பாடினர்.

எங்களுடைய கோரிக்கைகளை விநாயகப் பெருமானிடம் தெரிவித்து பிரார்த்திக்கிறோம். கணபதி அதர்வ சீரிஷம் என்கின்ற 1008 ஆவர்த்தி பாராயணம் செய்தால் நினைத்த காரியங்கள் அனுகூலம் பெறும். யார் மீதும் வெறுப்பு இல்லை யார் மனதும் புண்படுமளவிற்கு பேசவுமில்லை தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் பூஜை செய்யும் சிவாலயங்களில் இடைவெளி உள்ளது அனைவரும் அறிவர்.

ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வட மொழியில் உள்ள மந்திரங்கள் தெரிந்தாலும் தமிழில் பெரிய புராணத்தில் சேக்கிழார் சுந்தரமூர்த்தி நாயனார் புராணம் கூறியது போல் எவ்வளவு வறுமையில் வாழ்ந்தாலும் எவ்வளவு வளமாக இருந்தாலும் இறைவன் மீது பற்று நீங்காத குழுமமாக உள்ளோம். சிவாலய பூஜைகளில் ஆதிசைவர்கள் தவிர பல நூற்றாண்டுகளாக யாரும் பூஜைகளில் ஈடுபட முடியாது.

மற்ற கோயில்களில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எங்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள். தேவையில்லாத குழப்பத்தை உண்டாக்குவது மனவேதனையைத் தருகிறது. நாங்கள் யாருக்கும் விரோதிகள் அல்ல, அரசியல் ஈடுபாடும் கிடையாது, மற்ற மதங்களோடு வம்பு செய்வதும் கிடையாது என்று தெரிவித்தனர். பிராத்தனையில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story