பனை விதை நடும் விழா: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு

பனை விதை நடும் விழா: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு
X

கோட்டையிருப்பு கிராமத்தில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது. 

திருப்பத்தூர் அருகே மெகா பனைவிதை நடும் விழாவில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு கிராமத்தில், தமிழக பாரம்பரிய மரமான பனை மரங்களை பெருக்கும் விதமாக, அதன் விதைகள் நடும் நிகழ்ச்சி, இன்று மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அதன் தொடக்க நிகழ்ச்சி. இன்று திருப்பத்தூர் அருகே சுண்ணாயிருப்பு, கோட்டையிருப்பு ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்று, பனை மர விதைகளை நட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!