ஆ.தெக்கூர் அருகே கோவிலாப்பட்டி சாலையில் சரக்கு வாகன விபத்து : ஒருவர் பலி

ஆ.தெக்கூர் அருகே கோவிலாப்பட்டி சாலையில் சரக்கு வாகன விபத்து : ஒருவர் பலி
X

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்  தாலுகா ஆ.தெக்கூர் அருகே கவிந்து விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்

ஆ.தெக்கூர் கோவிலாப்பட்டி சாலையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையை விட்டு ஒதுக்கியபேது கவிழ்ந்தது

ஆ. தெக்கூர் அருகே சரக்கு வாகனம் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, நெற்குப்பை பேரூராட்சி அருகே உள்ள ஆ.தெக்கூரில் பொன்னமராவதியில் இருந்து காங்கேயம் பகுதிக்கு தேங்காய் பருப்பு முட்டைகளை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வாகனத்தின் உள்புறம் மூவரும் மேல் கூரையில் இருவரும் என ஓட்டுனர் வாகனத்தை ஓட்டிசென்றார்.

இந்நிலையில், ஆ.தெக்கூர் கோவிலாப்பட்டி சாலையில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையை விட்டு வாகனத்தை கீழே இறக்க முற்படும்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தலைகீழாக கீழே சரிந்தது. இதில் வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்திருந்த பழனி அம்பேத்கார் மகன் முருகன் (50) என்பவர் கீழே கிடந்த மரக்கட்டையில் மோதியதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவ்விபத்து குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நெற்குப்பை காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, ஜேசிபி இயந்திர உதவியுடன் வேனுக்கு அடியில் சிக்கி உயிரிழந்த முருகனின் சடலத்தையும் படுகாயமடைந்த நிலையில் மற்ற நபர்களையும் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் விபத்துக்கான காரணமாக தொடர் மழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் மற்றும் ஈர தன்மை காரணமாக ஓட்டுனர் திடீரென பிரேக் அடிக்க முற்பட்டபோது வாகனம் தன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

Tags

Next Story