சானிடைசருக்கு பதிலாக தண்ணீர் வைத்திருந்த ரெடிமேடு கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்
![சானிடைசருக்கு பதிலாக தண்ணீர் வைத்திருந்த ரெடிமேடு கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள் சானிடைசருக்கு பதிலாக தண்ணீர் வைத்திருந்த ரெடிமேடு கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்](https://www.nativenews.in/h-upload/2021/07/19/1183814-img20210719165830.webp)
சானிடைசருக்கு பதிலாக வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுத்துவதற்கு தண்ணீரை வைத்திருந்த ரெடிமேடு கடையை பூட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியின் ஆணைக்கிணங்க கொரோனா மூன்றாவது அலை பரவல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகில் வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமைல் பணியாளர்கள் குழுவினரால் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. .அப்போது முககவசம் இல்லாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெரியகடைவீதி பகுதி வர்த்தக நிறுவனங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுபடுத்தும் முன்னெச்சரிக்கை வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் சானிடைசருக்கு பதிலாக தண்ணீர் வைத்திருந்தது தெரிய வந்தது. இதை கண்டுபிடித்த துணை வட்டாட்சியர் செல்வராணி, வட்டாட்சியர் திருநாவுக்கரசு அளித்த புகாரின் அடிப்படையில் ஆயத்த ஆடை விற்பனை நிலையத்தை மூட உத்தரவிட்டார்.
அப்போது, ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் சானிடைசருக்கு பதிலாக தண்ணீர் வைத்திருந்தது தெரிய வந்தது. இதை கண்டுபிடித்த துணை வட்டாட்சியர் செல்வராணி, வட்டாட்சியர் திருநாவுக்கரசு அளித்த புகாரின் அடிப்படையில் ஆயத்த ஆடை விற்பனை நிலையத்தை மூட உத்தரவிட்டார். சானிடைசர் என்று வாடிக்கையாளருக்கு தண்ணீரை கொடுத்து ஏமாற்றிய ஆயத்த ஆடை விற்பனை நிலைய நிர்வாகிக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu