மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் அமைச்சர் பெரியகருப்பன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் அமைச்சர் பெரியகருப்பன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் நேரில் சென்று பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் வடிவேல், யூனியன் துணை தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, திருப்புத்தூர் வருவாய் ஆய்வாளர் மன்சூர், கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், மணிகண்டன், திருப்புத்தூர் வட்டார மருத்துவ அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், ராமசாமி, இராமேஸ்வரி கருணா, கலைமாமணி ராமச்சந்திரன், சரவணன், பாக்கிய லெட்சுமி, சுமதி, ஜெயபாரதி வடிவேல், தெக்கூர் பழனியப்பன், கருப்பையா, கலைமகள் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணியன், சுதாகர், அபிராமி சசிகுமார், அடைக்கப்பன், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள், கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu