திருப்பத்தூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு

திருப்பத்தூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு
X

திருப்பத்தூர் அருகே புதூரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் கே.என் நேரு ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் அருகே புதூரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் கே.என் நேரு ஆய்வு மேற்கொண்டார்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதூரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்த நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களை சந்தித்த போது ,

ராமநாதபுரம், மாவட்டம் குதிரை மல்லியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஆய்வு நடந்து வருவதாகவும், அந்த பணிகள் முடிவடைந்தால், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என்றும் தெரிவித்தார்.

பாஜகவை சேர்ந்த எல்.முருகன் மற்றும் H.ராஜா போன்றவர்கள் அவர்களுக்கென்று ஒரு நீதி பிறருக்கு ஒரு நீதி என்று வகுத்துக் கொள்வார்கள். பாண்டிசேரி அமைச்சரவையில் பாஜக பங்கேற்றுள்ளது. அங்கு மதுபான கடை திறந்து15 நாட்கள் ஆகிவிட்டது என்றும் அதனை மூடுவதற்கு பாஜகவினர் யாரும் வாய் திறக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!