குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்: நோய் தொற்று பரவும் அபாயம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்
குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி நகர் பகுதியில் சுந்தரம் நகரில் இருந்து சிறுவர் பூங்கா செல்லும் சாலையோரம் ஆசாத் ரைஸ் மில் அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிங்கம்புணரியை சுற்றி பெரியார் கால்வாய், அரசினம்பட்டி சாலை, சிங்கம்புணரி இடுகாடு அருகே பாலாறு அருகிலும்.ஏரியூர் சாலையிலும் தொடர்ச்சியாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், அவற்றை பொதுவெளியில் கொட்டும் நபர்கள் யார் எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாததால்.நேற்று சிங்கம்புணரி நகரின் குடியிருப்புப் பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொரோனா, டெங்கு என பொதுமக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், நகரின் உள் பகுதியிலேயே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினசரி கடந்து செல்லும் பாதையில், எந்தவித தயக்கமோ அச்சமோ அக்கறையோ இல்லாமல் மருத்துவக் கழிவுகள் தற்போது கொட்டப்பட்டு வருகிறது கண்டனத்துக்குரியது. இந்த மருத்துவ கழிவுகளால் தொற்று நோய் பரவும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்த அநியாயத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu