மருதுபாண்டியர்களின் 220-வது குருபூஜை விழா நாளை கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலைப் போராட்ட வீரர்களான சின்னமருது-பெரியமருது பாண்டியர் உருவச்சிலைகள்
மருதுபாண்டியர்களின் 220-வது குருபூஜை விழா நாளை கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூரில் விடுதலைப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அக்டோபர் 24ஆம் தேதி குருபூஜை விழா அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (அக்.24) காலை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் காலை 8 மணியளவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடக்கி வைக்கிறார்.
மருதுபாண்டியர்களின் 220-வது குருபூஜை விழாதொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
மேலும், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மருதுபாண்டியர்களுக்கு மரியாதை செலுத்த உள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu