மருது பாண்டியர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
X
மருது பாண்டியர் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
By - G.Suresh Kannan, Reporter |24 Oct 2021 3:42 PM IST
திருப்பத்தூர் மருது பாண்டியர் நினைவிடத்தில் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர்220 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டுமணிமண்டபத்தில் உள்ள அவர்களது சிலைகளுக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, இரா.காமராஜ் , கோகுல இந்திரா, பாஸ்கரன் , மற்றும் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் மலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அவர்களுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu