சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு: 200 மேற்பட்ட பங்கேற்பு - 30 பேர் காயம்

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு: 200 மேற்பட்ட பங்கேற்பு  - 30 பேர் காயம்
X

சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டி மதுராபுரி தொட்டி காத்தான் கண்மாய் கரையில் நடந்த மஞ்சுவிரட்டு

வேங்கைபட்டி மதுராபுரி தொட்டி காத்தான் கண்மாய் கரையில் அமைந்துள்ள உச்சிப்புளி கருப்பர் ஆலய மாசி களரி விழா நடந்தது

சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டி மதுராபுரி தொட்டி காத்தான் கண்மாய் கரையில் அருள்பாலிக்கும் உச்சிப்புளி கருப்பர் ஆலய மாசி களரி விழாவை முன்னிட்டு, மங்கான் கூட்ட பங்காளிகள் நடத்திய மஞ்சுவிரட்டில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன காளைகளை பிடிக்க முயன்ற 30 பேருக்கு காயம் ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டி மதுராபுரி தொட்டி காத்தான் கண்மாய் கரையில் அமைந்துள்ள உச்சிப்புளி கருப்பர் ஆலய மாசி களரி விழா நடைபெற்றது.இதன் சிறப்பம்சமாக மங்கான் கூட்ட பங்காளிகள் சார்பாக மஞ்சுவிரட்டு இன்று நடைபெற்றது.

இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை மதுரை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300க்கும் மேற்பட்ட கட்டு மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. முன்னதாக மங்கான் கூட்ட பங்காளிகள் சார்பாக வந்திருந்த காளைகளுக்கு சிறப்பு செய்யும் விதமாக வேட்டி துண்டுகளை மேளதாளத்துடன் வந்தனர். அதை தொடர்ந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. பார்வையாளர்கள் மத்தியில் புகுந்த மஞ்சுவிரட்டு மாடுகள் சிலரை முட்டியதால் 30க்கும் மேற்பட்டோர் சிறு சிறு காயமடைந்தனர்.

இந்த வருட அறுவடை சிறப்பாக நடத்திக் கொடுத்த உச்சிப்புளி கருப்பர் சுவாமிக்கு படையல் செய்து நன்றி கூறி வழிபடும் விதமாக இந்த மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.அவிழ்த்து விடப்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளை அடக்க இளைஞர்கள் முற்பட்டனர் அதில் மாடு முட்டியதில் 30க்கும் மேற்பட்டோர் சிறு சிறு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சுமார் 2000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் இதில் கலந்துகொண்டனர். அரசு அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட இந்த மஞ்சுவிரட்டு காரணமாக சிங்கம்புனரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா