மதுபாட்டிலை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

மதுபாட்டிலை பதுக்கி விற்பனை செய்தவர் கைது
X

முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் சட்ட விரோதமாக வீட்டில் 42 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை திருப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.

தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை திருப்புத்தூர் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் மது பாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக திருப்புத்தூர் நகர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததன் பேரில் நகர் காவல் ஆய்வாளர் புவனேஷ்வரி, சார்பு ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் சோதனை செய்தனர். அப்போது தென்மாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் என்ற 65 வயது முதியவர். இவர் மரவேலை செய்யும் ஆசாரியாக பணிபுரிந்து வருகிறார். அவர் வீட்டின் பின்புறம் மணலில் புதைத்து வைத்து தேங்காய் நாரை போட்டு மூடி 42 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்புத்தூர் நகர் காவல்துறையினர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததோடு வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!