மழை வேண்டி அம்மனுக்கு மதுக்குட திருவிழா: 5 பேர் மீது வழக்கு பதிவு

மழை வேண்டி அம்மனுக்கு மதுக்குட திருவிழா: 5 பேர் மீது வழக்கு பதிவு
X

திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் தெற்குப்பட்டியில் தடையை மீறி கோயிலில் மது எடுப்புத்திருவிழா நடத்திய கிராம மக்கள்

கொரோனா கட்டுபாடுகளை மீறி கோயில் திருவிழா நடத்தியதாக கண்டரமாணிக்கத்தை சேர்ந்தவர்கள் மீது போலீஸார் வழக்குபதிவு செய்தனர்

மழை வேண்டி அம்மனுக்கு மதுக்குட திருவிழா நடத்தியதாக 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் தெற்குப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கநாச்சி அம்மன் கோவில் ஐப்பசி மாத விழாவை முன்னிட்டு மழை வேண்டி மதுக்குடம் எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா கட்டுபாடுகள் இருப்பதால் விழாவுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. எனினும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புனிதநீர், வேப்ப இலை, தென்னம்பாளை கலந்த மதுகுடத்தை வைத்து, கும்மி கொட்டி வழிபாடு செய்த பின்பு, அங்கிருந்து முளைப்பாரி மற்றும் மதுக்குடங்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று அம்மன் குளத்தில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை, கண்டரமாணிக்கம் நாட்டார்கள் செய்திருந்தனர்.இந்நிலையில் கொரோனா கட்டுபாடுகளை மீறி கோவில் திருவிழா நடத்தியதாக கண்டரமாணிக்கத்தை சேர்ந்த ஆதினமிளகி, கணேசன் , சின்னத்தம்பி உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Tags

Next Story