அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி

அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில்   கிருஷ்ணஜெயந்தி
X

திருப்பத்தூர் அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகள் 

திருப்பத்தூர் அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் கிருஷ்ணஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது.

திருப்பத்தூர் அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகர மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன.முன்னதாக நின்ற நாராயண பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு சிறப்பு பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ கிருஷ்ணர் சுவாமியை எழுந்தருளச் செய்தனர். அதனை அடுத்து பால், தயிர், திருமஞ்சனம் பொடி, மாவு கரைசல், மஞ்சள், பழங்கள், தேன், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.

சுவாமிக்கு சந்தனம் சாற்றப்பட்டு துளசி மாலை அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது . இதனையடுத்து கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கோபுர தீபம், கும்ப தீபம், நாக தீபம் உள்ளிட்ட தீபாராதனைகள் நடைபெற்றன. இதன் பின்னர் சோடச உபசாரம் மற்றும் துளசி அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீகிருஷ்ண பகவானை வழிபட்டனர் விழாவை முன்னிட்டு பரத நாட்டிய நிகழ்வு நடைபெற்றது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!