திருப்பத்தூரில் ஐ.ஜே.கே பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் இராணுவ வீரர் A. அமலன் சபரிமுத்துவை ஆதரித்து, IJK கட்சியின் மாநில இணை பொது செய்லாளர் லீமா ரோஸ் மார்டின் பரப்புரை மேற்கொண்டார். திருப்பத்தூர் பேருந்து நிலையம், அண்ணாசிலை, காந்தி சிலை மற்றும் நகரின் முக்கிய வீதிகள் தோறும் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
அப்போது திருப்பத்தூர் நகர் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும் என்றும் கயிறு உற்பத்தி மேம்படுத்தப்படும் வாக்குறுதியளித்தவர், நாட்டை காத்த இராணுவ வீரருக்கு தூய்மையான நல்லாட்சி நடத்திட வாய்ப்பு தருமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஸ்ரீனிவாசன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ராஜா, சிவகங்கை மாவட்ட தலைவர் ஜெபஸ்டியன் வேதராஜா, மகளிரணியனர், மக்கள் நீதிமையம் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் வாக்குகளை சேகரித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu