திருப்பத்தூர்: சுகாதார அலுவலர் ஆய்வு

திருப்பத்தூர்: சுகாதார அலுவலர் ஆய்வு
X
திருப்பத்தூர் நகர் முழுவதும் பேரூராட்சி சார்பில் சுகாதார அலுவலர் ஆய்வு!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் கடைகள், உணவகங்கள் என அனைத்து பகுதிகளிலும் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சி சுகாதார அலுவலர் அபூபக்கர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மேலும் நகரின் அனைத்து வீடுகளிலும் டெங்கு, மலேரியா, போன்ற நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்க தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வீடுகளில் தேவையின்றி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகன டயர்கள், போன்ற சாதனங்களில் ஆய்வு மேற்கொண்டதோடு, தற்சமயம் வேகமாக பரவி வரும் கொரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வணிக வளாகங்களில் ஒட்டியும்,மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், கடைவீதிகள், தெருக்கள் போன்ற இடங்களில் கிருமிநாசினி தெளித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்சமயம் தமிழக அரசு முழுஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், விழிப்புணர்வுகளும், பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



Tags

Next Story