பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
X

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயக பெருமான் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது.

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயக பெருமான் திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீகற்பக விநாயகப் பெருமான் திருக்கோவிலில் விநாயக சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு காலை கொடியேற்றம் வைபவம் நடைபெற்றது.

முன்னதாக சிறிய கேடயத்தில் உற்சவர் ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமான் சர்வ அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினார் தொடர்ந்து மூலவர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்துக்கு மூஷிக வாகனம் படம் வரையப்பட்ட வஸ்திரத்தை கொண்டு வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு தர்பைப்புல், மாவிலை. பூமாலைகள் மற்றும் பட்டு வஸ்திரம் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் அங்குச தேவருக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அலங்கார தீபம், நாக தீபம், கும்ப தீபம் நடைபெற மங்கள வாத்தியங்கள் முழங்க பஞ்சமுக கற்பூர ஆராதனை காட்டப்பட்டன.

Tags

Next Story