மதுராபுரியில் மீன்பிடி திருவிழா: குடும்பத்துடன் குவிந்த கிராம மக்கள்
மதுராபுரி வேங்கை பட்டியில் உள்ள தொட்டி காத்தான் கண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மதுராபுரியில் மீன்பிடி திருவிழா கணவன் மனைவி குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக மீன்பிடித்து மகிழ்ச்சி.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுராபுரி வேங்கை பட்டியில் உள்ள தொட்டி காத்தான் கண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. வருடம் முழுவதும் நீர் பாசனம் நிறைவுபெற்று மீதி குளத்து தண்ணீரில் உள்ள மீன்களைப் பிடிக்க கிராமத்தார்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வு மீன்பிடித் திருவிழா ஆகும்.
இந்த நிகழ்வில் கணவன் மனைவி குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக அந்த பகுதியை சேர்ந்த கிராமத்து மக்கள் மீன்களை இலவசமாக பிடித்துச் சென்று பயன்படுத்துவது வழக்கமாகும்.
இன்று காலை தொட்டிகாத்தான் கண்மாய் ஆயக்கட்டுகாரர்கள் கொடி அசைக்க அமைதியாக காத்திருந்த கிராமத்தினர் கண்மாயில் இறங்கி மீன் பிடிக்க துவங்கினர். இந்த மீன்பிடி திருவிழாவில் கட்சா, ஊத்தா, பரி , வலை உள்ளிட்ட கிராம மீன்பிடி உபகரணங்களை கொண்டு முழங்கால் அளவு கிடைக்கும் குளத்து தண்ணீரில் உள்ள மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
கிடைத்த மீன்களைக் கொண்டு தங்களது வீடுகளில் மீன்குழம்பு கள் வைத்து உண்டு மகிழ்ந்தனர். இதனால் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மீன் குழம்பு வாசனை ஆளை மயக்கியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu