/* */

பாராமரிக்கப்படாத கண்மாய் வடிகால்: 160 ஏக்கர் நெல் வாழை பயிர்கள் சேதம்

குடிமராமத்து பணிகளை சரிவரச்செய்யாத தால் பல லட்சம் மதிப்புள்ள நெல், வாழை முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது

HIGHLIGHTS

பாராமரிக்கப்படாத கண்மாய் வடிகால்:    160 ஏக்கர்  நெல் வாழை பயிர்கள் சேதம்
X

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பெய்த மழையால் நீரில் முழ்கிய வாழைத்தோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்குள்பட்ட சிங்கம்புணரி பகுதியில் உள்ள கண்மாயில் வடிகால் சீரமைக்கப்படாதால் வயல்வெளியில் புகுந்த மழை நீரால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழைப்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எஸ்.மாத்தூர் ஊராட்சிக்குள்பட்ட உடன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய் ஆனது சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் மழை காரணமாக, வயல்களை சுற்றியுள்ள வரத்து கால்வாய் வழியாக தொடர்ந்து மழைத்தண்ணீர் வயலுக்குள் புகுந்தது. வயல்வெளிகள் தேங்கியுள்ள தண்ணீரை இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கண்மாய்க்கு செல்லும் பாதையில் திருப்பி விட்டதால் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

இந்நிலையில், கண்மாயிலிருந்து மடைகள் மூலமாகக தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் முயற்சிக்கும் போது மடைகள் முற்றிலுமாக அடைபட்டுகிடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இக்கண்மாய்க்கு குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டபோது கண்மாயின் இருபுறங்களில் ஒருபுறம் சுமார் 11 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டது. அதில், மறுபுறம் மண்ணை அகற்றாமல் விட்டுச்சென்றுவிட்டனர். கண்மாயில் இருந்து உபரி நீர் கலிங்கு வழியாக வெளியேறக்கூடிய தண்ணீர் அந்தப்பாதையில் செல்ல முடியாமல், மீண்டும் கண்மாய் கரையின் இருபுறங்களிலும், உள்ள வயல்வெளிக்கு புகுந்தது. இருபுறங்களிலும் சுமார் 160 ஏக்கர் விளைநிலங்களில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில் இருந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயி கருவபாண்டியன் கூறுகையில்,குடிமராமத்து பணிகளை சரிவரச்செய்யாததால் பல லட்சம் மதிப்புள்ள நெற்பயிர் மற்றும் வாழை முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. தமிழக அரசு விவசாயத்திற்கு முன்னுரிமை தந்து விவசாயிகளை ஊக்குவித்து வரும் நிலையில், அதனை மக்களிடம் எடுத்துச் செல்லும் அதிகாரிகளின் மெத்தனப் போக்குதான் இந்த நிலைக்கு காரணரம் என்று குற்றம்சாட்டினார்.

எனது தோட்டத்தில் உள்ள 15 லட்சம் மதிப்புள்ள வாழைப்பயிர், நடவு செய்யப்பட்ட நெற்பயிர் மற்றும் மின் மோட்டார், டீசல் மோட்டார் என அனைத்துமே நீரில் சேதமடைந்துள்ளன. கடந்த ஒரு வார காலமாக என் சொந்த செலவில் வயல்வெளிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற மோட்டார்கள் உதவியோடு முயற்சி செய்தும் இன்றளவும் அது முடியவில்லை என்றார்.

அதிகாரிகள் தலையிட்டு கண்மாயில் வடிகால் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை மராமத்து பணி செய்ய வேண்டும். தொடர்ந்து பெய்து வரும் கனமழை நீடித்தால் வலுவிழந்த கண்மாய்க்கரை சேதமடைந்து பேரழிவை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. சேதத்தை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 Oct 2021 9:18 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...