கொரானா அறிகுறி உள்ளவர்கள் சுய வைத்தியம் பார்க்க வேண்டாம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் covid-19 தடுப்பு தொடர்பாக சுகாதாரத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், ஊரடங்கு தளர்வு தொடர்பாக பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி செய்தியாளர்களிடர் எடுத்துரைத்தார்.
அப்போது கொரானா அறிகுறி உள்ளவர்கள் சுய வைத்தியம் பார்க்க வேண்டாம் என்றும் மருத்துவர்களை சிகிச்சை பெற்றுகொள்ளுவது அவசியம் என்றார். தாமதமாக வந்தால் நோய் பாதித்து அதிகமாகி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித்தார். தற்போது சிவகங்கை மாவட்டத்தில் போதுமான ஆக்ஸிசன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளதாகவும், கூடுதலாக ஆக்ஸிசன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து
மாவட்டத்தில் கொரானா சிகிச்சை பணிக்காக புதிதாக 60 செவிலியர்கள் நியமிக்கபட்டுள்ளதாகவும், போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் நாள்தோறும் 1500 முதல் 2000 பேர் வரை தடுப்பூசி போடப்பட்டு வருவதாக தெரிவித்தவர், பொதுமக்கள் அரசின் கட்டுபாடு களை கடைபிடித்தால் பெரும் தொற்றை கட்டுபடுத்தலாம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu