கல்விக் கூடங்களில் மதசார்பு உடை தேவையில்லை என்பதே தேமுதிக நிலைப்பாடு: பிரேமலதா
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
ஹிஜாப் பிரச்னையில் தனியாகப் போராடும் பெண்ணுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் அதே நேரத்தில் , கல்விக்கூடங்களில் மத சார்பு உடை தேவையில்லை என்பதே தேமுதிக வின் நிலைப்பாடு. என்றார் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவும்,அதிமுகவும் மாறி, மாறி அரசியல் செய்து வருகின்றன.பெட்ரோல் குண்டு வீச்சு என்பது தவறான கலாச்சாரம், அது பாஜகவிற்கு மட்டுமல்ல எந்த கட்சிக்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது. தேர்தலின் போது திமுக கொடுத்த நீட் தேர்வு, மாதம் 1000 ரூபாய் போன்ற எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்ற மனக்குறை மக்களிடம் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்சி பலம், பணபலம்,அதிகார பலத்தை எதிர்த்து தனித்து களம் காண்கிறோம், மக்கள் தேமுதிகவிற்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக பிரேமலதா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu