திருப்பத்தூர்-சிவகங்கையில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருப்பத்தூர்-சிவகங்கையில்  கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருப்பத்தூரில் பொது சுகாதாரத்துறை மற்றும் சேவை நிறுவனங்கள் நடத்திய கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்ட நர்ஸ்.

திருப்புத்தூரில் கோவி சீல்டு தடுப்பூசி முகாமில் 163 பேருக்கு போடப்பட்டது.

திருப்புத்தூரில் வசந்த பெருவிழா குழு, பசுமை பாரதம் அமைப்பு மற்றும் சுகாதாரத் துறை மருத்துவ குழு இணைந்து கோவி சீல்டு தடுப்பூசி முகாமில் 163 பேருக்கு போடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை , திருப்புத்தூர்ஸ்ரீ பூமாயி அம்மன் கோவில் வசந்தப் பெருவிழா குழு மற்றும் திருப்புத்தூர் பசுமை பாரதம் அமைப்பும் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட முகாம் திருப்புத்தூர் இன்பம் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் புதிதாக வந்தவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டது. இரண்டாவது டோஸ் கோவிஷீல்டு 107 பேருக்கும், இரண்டாவது டோஸ் கோவாக்சின் 10 பேருக்கும் முதல் டோஸ் கோவிஷீல்டு (புதிதாக) 46 பேருக்கும் மொத்தமாக 163 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது

மேலும் முக்கிய அறிவிப்பாக புதிதாக முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு செலுத்தக்கூடிய இரண்டாம் டோஸ் தடுப்பூசியை திருப்புத்தூர் அரசு மருத்துவமனை அல்லது திருக்கோஷ்டியூர் அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்தனர். கொரோனா என்னும் கொடிய நோயிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் காத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழு, பசுமை பாரதம் அமைப்பு, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil