காட்டாம்பூரில் மத்திய தொழிலாளர் கல்வி மையம் - கிராம இயக்க கருத்தரங்கம்

காட்டாம்பூரில் மத்திய தொழிலாளர் கல்வி மையம் - கிராம இயக்க கருத்தரங்கம்
X

காட்டாம்பூரில் மத்திய தொழிலாளர் கல்வி மையம் மற்றும் கிராம இயக்கம் சார்பில்  நடைபெற்ற கருத்தரங்கம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் 40 பெண்கள் கலந்து கொண்டனர்

காட்டாம்பூரில் மத்திய தொழிலாளர் கல்வி மையம் மற்றும் கிராம இயக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூர் சமுதாயக் கூடத்தில், மத்திய அரசின் மத்திய தொழிலாளர் கல்வி மையம் மற்றும் கிராம இயக்கம் இணைந்து பெண் தொழிலாளர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கருத்தரங்கில் பேராசிரியர் நாகராஜன், வழக்கறிஞர் ராமச்சந்திரன், பயிற்றுநர் தமயந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக கிராம இயக்க அலுவலர் தமிழ் செல்வி வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் வெ.சீனிவாசன், கிராம செவிலியர் ஜெயவாணி, மத்திய தொழிலாளர் கல்வி வாரிய அலுவலர் செண்பகராஜன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் 40 பெண்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil