ஜெயங்கொண்டநிலையில் கழிவறைக்காக தோண்டப்பட்ட குழியில் பழங்கால மன்னர் கால மண் குடுவை தாசில்தாரிடம் ஒப்படைப்பு
![ஜெயங்கொண்டநிலையில் கழிவறைக்காக தோண்டப்பட்ட குழியில் பழங்கால மன்னர் கால மண் குடுவை தாசில்தாரிடம் ஒப்படைப்பு ஜெயங்கொண்டநிலையில் கழிவறைக்காக தோண்டப்பட்ட குழியில் பழங்கால மன்னர் கால மண் குடுவை தாசில்தாரிடம் ஒப்படைப்பு](https://www.nativenews.in/h-upload/2021/07/24/1194460-img-20210724-wa0058.webp)
ஜெயங்கொண்டநிலையில் கழிவறைக்காக தோண்டப்பட்ட குழியில் கிடைத்த பழங்கால மன்னர் கால மண் குடுவை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி பொன்னழகு. இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே கழிவறை கட்டுவதற்காக குழி தோண்டியபோது, மன்னர் காலத்தை சேர்ந்த பழமையான மண் குடுவை கிடைத்துள்ளது. பார்த்து ஆச்சரியமடைந்த பொன்னழகு, அதை தனது உறவினர் திருநாவுக்கரசுவிடம் அதை கொடுத்தார். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அதிகாரி சசிவர்ணன் இடத்தை பார்வையிட்டு, கண்டெடுக்கப்பட்ட மண்குடுவையுடன், சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உறவினர் திருநாவுக்கரசை அழைத்து வந்தார்.
அந்த மண் குடுவையை, வட்டாட்சியர் திருநாவுக்கரசிடம் முறைப்படி ஒப்படைத்தார். சுமார் 400 கிராம் எடையுள்ள இந்த மண் கலயத்தை தொல்லியல் துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக தாசில்தார் திருநாவுக்கரசு தெரிவித்தார். இந்நிகழ்வின்போது ஜெயங்கொண்டநிலை வருவாய் அலுவலர் சசிவர்ணம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu