தர்மம் அல்ல! நியாயம் அல்ல! -வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி தாலுகா தெற்கு மற்றும் வடக்குஒன்றியங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை மருது அழகுராஜ் மேற்கொண்டார். ஏரியூர்,மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்ட நிலை, வடவன்பட்டி, மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மக்களிடையே உரையாற்றும்போது,
ஒரு எம்எல்ஏவுக்கு பச்சை மை கொண்ட பேனா வழங்குவதே பிற மக்களின் வாழ்க்கையை பசுமையாக மாற்ற வேண்டும் என்பதற்காக தான் பச்சை மை பேனா வழங்கியுள்ளார்கள. அந்தப் பேனா தலை குனியும் போது ஒருவரின் குடும்பம் தலை நிமிரும். ஆக அப்படி அதையெல்லாம் செய்ய தவறிய பெரியகருப்பன் நான்காவது முறையாக தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்பது தர்மம் அல்ல, நியாயமல்ல ! மேலும் இப்பகுதி மக்களுக்கு அவர்களின் தேவை அறிந்து என்ன செய்துள்ளார். ஆனால் எடப்பாடியாரோ இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் கோழி தன் குஞ்சுகளை அடைய்காப்பது போல் தமிழக மக்களை காக்க பாடுபட்டார். இன்னும் எத்தனையோ திட்டங்களை உங்களுக்கு செயலாற்றிட காத்துக் கொண்டிருக்கிறார்.
எனவே மறவாது இரட்டை இலைக்கு நிச்சயம் வாக்கு அளிப்பீர்கள் ஒரே ஒரு முறை இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் உங்களுக்கு சுபிட்சம் வாழ்வில் பெருகும் என நான் சொல்கிறேன் என்று தன் கவிதையை பேச்சோடு மக்களிடையே உரையாடி வாக்குகள் சேகரித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி நாகராஜன் ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர், பொன்மணி பாஸ்கரன், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் கரு. சிதம்பரம், திருப்பத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் ராமலிங்கம், சிவமணி, வடிவேல் ,சிங்கம்புணரி ஒன்றிய தலைவர் திவ்யா பிரபு, ஒன்றிய செயலாளர் ஜெகன் மற்றும் பாஜக ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் , கட்சி தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu