திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்குள் 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் இறப்பு
![திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்குள் 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் இறப்பு திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்குள் 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் இறப்பு](https://www.nativenews.in/h-upload/2021/07/06/1157260-img-20210706-wa0012.webp)
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து நிலையத்திற்குள் 65 வயது மூதாட்டி இறந்து கிடந்தார். இதனையடுத்து பேருந்து நிலையத்துக்குள் இறந்து கிடந்தவரை பற்றி, திருப்பத்தூர் நகர் கிராம நிர்வாக அலுவலர் சின்னையா கொடுத்த தகவலின் பெயரில் திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் மலைச்சாமி நேரில் சென்று பார்வையிட்டு விசாரணையில் ஈடுபட்டார்.
விசாரணையில், இறந்து கிடந்தவர் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்களம் கிராமத்தைச் சேர்ந்த மந்தையனின் மகள் வள்ளி (65) என்பதும், இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் தெரிய வந்தது. இவர் பெட்டிக் கடைகளில் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
பின்பு இவரது இறப்பு குறித்து அவரது உறவினரான சகோதரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் பின்பு திருப்பத்தூர் சிவகங்கை சாலையில் உள்ள மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பேருந்து நிலையத்திற்குள் இறந்துகிடந்த மூதாட்டியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu