திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தீவிர பிரசாரம்

திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர்  பெரியகருப்பன் தீவிர பிரசாரம்
X
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.ஆர.பெரியகருப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று அவரது சொந்த ஊரான அரளிக்கோட்டைகிராமத்தில் பிரச்சாரத்தை துவக்கினார். ஜமீன்தார்பட்டி, கணேசபுரம், ஏரியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

செல்லுமிடமெல்லாம் பெண்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்தும், குழந்தைகள் ரோஜா மலர் கொடுத்தும் பெரியவர்கள் சால்வைஅணிவித்தும் மலர்மாலை அணிவித்துசிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்பு அகே.ஆர.பெரியகருப்பன்உரையாற்றும்போது அன்று காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாய் இருந்தது இதனை மோடி குறை கூறினார் ஆனால் இன்று அதே எரிவாயு சிலிண்டர் விலை 900 ரூபாய் தாண்டி பொதுமக்கள் கடும் கஷ்டத்துக்கு ஆளகியுள்ளனர்.

பாஜக அரசு மக்களை வாட்டி வதைக்கிறது. தமிழகத்தை ஆளுகின்ற எடுபிடி எடப்பாடி அரசு எவ்வித நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் கொள்ளையடிப்பதை மட்டும் கண்ணும் கருத்துமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இந்த ஆட்சியை அகற்றி விட திமுக தலைவர் தளபதியின் தலைமையில் நல்லாட்சி மலர்ந்திட இத் தொகுதியில் நிற்கும் தளபதியின் ஆசி பெற்ற வேட்பாளர் ஆகிய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!