சிங்கம்புணரி-இறைச்சிக் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

சிங்கம்புணரி-இறைச்சிக் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
X

 உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள இறைச்சிக் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி ஆய்வு மேற்கொண்டார்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள இறைச்சிக் கடைகளின் மீது தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி ஆய்வு மேற்கொண்டார். சோதனையில் முறைகேடுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆய்வின்போது, 'வெள்ளாட்டு இறைச்சி, செம்மறி ஆட்டு இறைச்சி எனப் பிரித்து, வாடிக்கையாளர்களிடம் எடுத்துக் கூறி விற்பனை செய்யவேண்டும் எனவும், இறைச்சியில் உள்ளாட்சி நிர்வாகத்தினரால் குத்தப்படும் முத்திரையில் தேதி சரியாக தெரிய வேண்டுமெனவும், அதற்கான ரசீதை எப்போதும் கடையில் வைத்திருக்க வேண்டுமெனவும்' இறைச்சி விற்பனை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார். இறைச்சி விற்பனையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சிங்கம்புணரி செந்தில், சாக்கோட்டை தியாகராஜன், திருப்பத்தூர் இப்ராஹிம் மற்றும் காரைக்குடி முத்துகுமார் ஆகியோர் உடனிருந்தனர். சிங்கம்புணரி பேரூராட்சியின் அலுவலர்கள் யாரும் ஆய்வின்போது கலந்து கொள்ளாதது குறிப்பிடதக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!