திருப்பத்தூர் அருகே மரம் விழுந்து வீடு சேதம்: வீதியில் சமைக்கும் கூலித்தொழிலாளி

திருப்பத்தூர்  அருகே மரம் விழுந்து வீடு சேதம்:   வீதியில் சமைக்கும் கூலித்தொழிலாளி
X


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கம்பனூரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பனை மரம் விழுந்து ஒட்டுவீடு முற்றிலும் சேதமானது. இதனையடுத்து அக்குடும்பத்தினர் 4 நாட்களாக வீதியில் சமைத்து உறங்குகின்றனர்.

திருப்புத்தூர் அருகே கம்பனூரில் ஆதிதிராவிடர் காலனி பகுதியி்ல் கடந்த ஞாயிற்றுக்கிழமை காற்றுடம் பெய்த மழையால் கூலித்தொழிலாளியான மாதவன் என்பவர் வீட்டின் அருகில் இருந்த சுமார் 80 ஆண்டுகள் பழமைவாய்ந்த கூந்தப்பனை மரம் முறிந்து ஓட்டுவீட்டின் மீது விழுந்ததில் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. வீட்டிலிருந்த மாதவனின் மனைவி செல்வி, அவரது 2 மகள்கள் சிறு காயங்களுடன் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். இக்குடும்பத்தினர் கடந்த 4 நாட்களாக வீதியில் சமைத்து வீட்டருகிலேயே படுத்து உறங்குகின்றனர்.

இதுகுறித்து, குடும்பத்தலைவி செல்வி கூறும் போது, எங்கள் வீடு ஞாயிற்றுக்கிழமையன்று மழை மற்றும் பலத்த காற்றினால் பனைமரம் விழுந்து முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. எங்கள் வீட்டின் மீது விழுந்துள்ள மரத்தை அகற்றி பாதிக்கப்பட்டுள்ள வீட்டிற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம். வீடு இடிந்ததினால் மடிக்கணினி, தொலைக்காட்சிப்பெட்டி, மின்விசிறி, பீரோ முதலியன முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாகப் பார்வையிட்டு எங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மனு அனுப்பியுள்ளோம் என்றார்.

Next Story
வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் கட்டாயம்..!