திருப்புத்தூரில் காவலர்களுக்கு டிஎஸ்பி பொன்ரகு தலைமையில் யோகா பயிற்சி வழங்கப்பட்டது

திருப்புத்தூரில் காவலர்களுக்கு டிஎஸ்பி பொன்ரகு தலைமையில்  யோகா பயிற்சி வழங்கப்பட்டது
X
திருப்புத்தூரில் காவலர்களுக்கு டிஎஸ்பி பொன்ரகு தலைமையில் மனித ஆற்றல் மருத்துவ யோகா பயிற்சி வழங்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் தனியார் திருமண மஹாலில் மனித ஆற்றல் மருத்துவ யோகா பயிற்சியினை காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொன்.ரகு தலைமையில் மகா யோகம் அறக்கட்டளை யோகா பயிற்சியாளரும், தலைமையாசிரியருமான சிதம்பரம், கட்டிடக்கலை வல்லுனர் மாணிக்கம் ஆகியோர் யோகா சிறப்பு பயிற்சியை காவலர்களுக்கு அளித்தனர். பெரும் தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், உடல் ரீதியான, மனரீதியான பிரச்சனைகள் குறித்து தீர்வு பெற வேண்டி சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, சார்பு ஆய்வாளர்கள் மலைச்சாமி, பிரிட்டோ, போக்குவரத்து சார்பு ஆய்வாளர் முத்துராமலிங்கம், மற்றும் திருப்புத்தூர் சரகத்திற்கு உட்பட்ட 80க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!