பாரம்பரியமாக வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்

பாரம்பரியமாக வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்
X

வெள்ளைச் சேலை அணிந்து பொங்கல் வைக்கும் பெண்கள்.

ஏழை பணக்காரன் என்ற பேதத்தை போக்கும் விதமாக சிவகங்கை அருகே பாரம்பரியமாக வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்.

சிவகங்கை அருகே மதகுபட்டி கீழத்தெரு, மேற்குத்தெரு, சலுகைபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் காவல் தெய்வங்களாக பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இவர்கள் பொங்கல் பண்டிகையின்போது அம்மனுக்கு பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைப்பது பாரம்பரியமாக வழக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.

காலையில் மாடுகளை தொழுவத்தில் அடைத்து, ஒவ்வொரு வீடாக சென்று சாமி ஆடி, அருள் வாகு கூறப்படும். இதன் பின்னர் அனைவரும் ஒன்றாக வெள்ளை சேலை அணிந்து கொண்டு பச்ச தெய்வங்களுக்கு முன்பு ஏழை, பணக்காரர் என வித்தியாசமின்றி அணிகலன்கள் அணியாமல் ஒரே மாதிரியாக உடையணிந்து பொங்கல் வைத்தனர். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே விரதம் இருக்க தொடங்கி விடுவார்கள். இங்கு அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நடந்து வருவதாகவும், குறிப்பாக வெளிநாட்டிற்கு செல்வது போன்ற காரியங்கள் நினைத்து கொண்டால் மறு வருடமே சென்று விடுவார்கள் என்பாத்து அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!