பாதையை மறித்து சுற்றுச்சுவர்: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் சாலை மறியல்

பாதையை மறித்து சுற்றுச்சுவர்: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் சாலை மறியல்
X

சிவகங்கை அருகே சாவை  மறியலில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள்

இலங்கை அகதி முகாம்களுக்கு அரசு வழங்கும் ரேஷன் அரிசி, ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை தனியார் பள்ளி ஆக்கிரமிப்புதாக புகார்

அகதிகள் முகாம் மக்கள் பாதையை மறித்து சுற்றுசுவர் கட்டும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் கிராமத்தில் சோமசுந்தரம் செட்டியார் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பின்புறம் சுமார் 800க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் ஈழத்தமிழர்கள் குடியிருப்பு உள்ளது. இலங்கை அகதி முகாம்களுக்கு அரசு மூலம் வழங்கும் ரேஷன் அரிசி மற்றும் ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறித்து (அரசு புறம்போக்கு இடம் என்று அந்த மக்களால் கூறப்படும் இடத்தில்) தனியார் பள்ளி ஆக்கிரமிப்புசெய்வதாகவும், தட்டிக்கேட்ட முகாமில் உள்ள அகதிகளையும், அரசு அதிகாரிகளையும் தரக்குறைவாகப் பேசும் பள்ளி ஆசிரியரைக் கண்டித்தும் முகாமில் உள்ள மக்கள், சிவகங்கை -திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மதகுபட்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர்.

Tags

Next Story
பா.ம.க. கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் ரகசிய பறிமுதல்: அதிர்ச்சி தகவல்..!