9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் நகர்புற தேர்தல்: அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கையில் மருத்துவ பயனாளிகளுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன்.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்த்தல் முடிந்த உடன் படிப்படியாக நகர்புற தேர்தல்கள் நடத்தப்படும் என்றார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.
சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மருத்துவ பயனாளிகளுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கினார். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் மேலும் பேசியதாவது: உள்ளாட்சி அமைப்புகள் என்பது ஒரு மரத்தின் வேர்களை போன்றது, அந்த வேர்களை சிதைத்தது அதிமுக அரசுதான்.ஒரு தேர்தலை நடத்த வேண்டும் என்றால், வார்டு மறு வரையறை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், உள் ஒதுக்கீடு போன்ற பல அடிப்படை நடவடிக்கைகளை பூர்த்தி செய்த பிறகுதான் நடத்த முடியும். அவரவர் விரும்புகிற போது தேர்தலை நடத்த முடியாது .
கடந்த அதிமுக ஆட்சி தோல்வி பயத்தினால் உள்ளாட்சி தேர்ததை நடத்த விடாமல் பார்த்துக் கொண்டது என்றும், தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதலமைச்சர் தயார், மக்கள் ஆதரவுடன் மீண்டும் மகத்தான வெற்றி பெறுவோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu