சிவகங்கை: நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையால் மக்கள் அவதி
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையால் கிராம மக்கள் கடும் அவதி.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், மறவமங்கலம் சூராணம் சாலையில் கோடியக்கரை வழியாக கிராம்புளி செல்லும் சாலை கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி 298.80 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் III 2020-2021ன் கீழ் ஆரம்பிக்கப்பட்டு, எட்டு மாதங்கள் கடந்தும் இன்றுவரை முடிவடையாததாலும், மாற்று சாலை இல்லாததாலும் கிராம பொதுமக்கள் சிரமப்படும் நிலை தொடர்கிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். சேறும். சகதியுமாக சாலை இருப்பதாலும் வெளியில் செல்ல இயலாமல். ஊருக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் விவசாய பணி, மருத்துவமனை , ரேஷன் பொருட்கள் வாங்குவது போன்ற அத்தியாவசித்தேலைகளுக்காக வெளியில் செல்ல சாலை வசதியின்றி தவித்து வருவதாகவும், 7 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மறவமங்கலம் செல்ல வேண்டும். ரேஷன் பொருட்கள் வாங்க இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பளுவூர் செல்ல வேண்டிய சூழ்நிலையில், கர்ப்பிணிகள் நோயாளிகள் யாருக்கேனும் உடல்நலம் சரியில்லை என்றால் கூட எங்கள் ஊருக்கு 108 வாகனம் கூட வரமுடியாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu