தூய்மை இந்தியா திட்டம்: சிவகங்கை நகர வீதிகளை சுத்தம் செய்த கலெக்டர்

தூய்மை இந்தியா திட்டம்: சிவகங்கை நகர வீதிகளை சுத்தம் செய்த கலெக்டர்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்,  சிவகங்கை நகர வீதிகளை சுத்தம் செய்யும் பணியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி. 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிவகங்கையில் இன்று வீதிகளை சுத்தம் செய்யும் பணிகளை, அரண்மனை வாசலில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தொடங்கி வைத்தார். அதன்படி, சிவகங்கை நகராட்சி மற்றும் நேரு யுகேந்திரா இணைந்து, சிவகங்கையில் முக்கிய வீதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், சிவகங்கை தாசில்தார் தர்மலிங்கம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டி, சுகாதார அலுவலர் விஜயகுமார், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் கிருபா தினகரன், தூய்மை பணி மேலாளர் ராஜேந்திரன் மற்றும் கணேசன், துப்புரவு பணியாளர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் சிவகங்கை நகர வீதிகளில் சென்று கீழே கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியும், வீதி வீதியாகச் சென்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

Tags

Next Story