15 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் விடுபடாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

15 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் விடுபடாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
X

சிவகங்கையில் பள்ளி மாணவிகளுக்கு  முகக்கவசம் வழங்கிய  மாவட்ட நிர்வாகம்

15 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் விடுபட வகையில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.ஆட்சியர் அறிவுறுத்தினார்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கீழபூங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 15க்கும் வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கொரோனா தோற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி 15 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் விடுபடாத வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கான மேல் நடவடிக்கை எடுத்த புதிய கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறையினருடன் ஆலோசனை பெற்று செயல்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன. மாணவ மாணவியர்களின் கல்வித் தரம் குறித்து கேட்டறிந்து முறைப்படி பாடங்களை அன்றே படிக்க வேண்டும். பொது அறிவு குறித்த புத்தகங்களை ஏடுகளை படித்தால் நினைவாற்றல் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!