சிவகங்கை ஐயப்பன் சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு ஆராதனை

சிவகங்கை  ஐயப்பன் சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு  ஆராதனை
X

சிவகங்கை அருள்மிகு ஐயப்பன் சுவாமி கோயிலில்  நடைபெற்ற கார்த்திகை மாத சிறப்பு அலங்கார ஆராதனை

மூலவர் ஸ்ரீ ஐயப்ப சுவாமி மற்றும் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது

சிவகங்கை அருள்மிகு ஐயப்பன் சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு அலங்கார ஆராதனை

சிவகங்கை நகர் நேரு பஜார் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன. முன்னதாக மூலவர் ஸ்ரீ ஐயப்ப சுவாமி மற்றும் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோபுர தீபம், கும்ப தீபம் மற்றும் பல்வேறு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து, ஷேசாட உபசாரங்கள் நடைபெற்றன. பின்னர் பஞ்சமுக கற்பூர ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீ ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.

Tags

Next Story