சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில் பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
சிவகங்கையிலுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது
சிவகங்கையிலுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.
சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன.
முன்னதாக கோவிலின் காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் மூலவர் பைரவர் சுவாமிக்கு திருமஞ்சனப் பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் விபூதி சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சார்த்தி எலுமிச்சை மாலை வடைமாலை அரளிப்பூ மாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
தொடர்ந்து உதிரி பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து, மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவர் சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu