சிவகங்கை: ஊரடங்கை மீறிய 83 இருசக்கர வாகனம் பறிமுதல்; ரூ.63,900அபராதம்!

சிவகங்கை: ஊரடங்கை மீறிய 83 இருசக்கர வாகனம் பறிமுதல்; ரூ.63,900அபராதம்!
X

சிவகங்கை மாவட்டத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 83 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.63,900 அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இ பதிவு இல்லாமல் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை மீறி சுற்றித்திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.

அதன்படி சிவகங்கை மாவட்டம் முழுவதிலும் 83 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 63 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் ராச ராசன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!