சிவகங்கை காவல்துறை வாகனங்கள் : ஏலம் எடுக்க முன் வராததால் ஏலத் தேதி ஒத்திவைப்பு

சிவகங்கை காவல்துறை வாகனங்கள் : ஏலம் எடுக்க முன் வராததால் ஏலத் தேதி ஒத்திவைப்பு
X

சிவகங்கை மாவட்ட காவல்துறையால் ஏலம் விட வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்

சந்தை விலைக்கு அதிகமாக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் வாகனங்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன் வரவில்லை

சிவகங்கையில் காவல் துறையின் சார்பாக பழுதடைந்த காவல் வாகனங்கள் ஏலம்.தொகை அதிகமாக இருப்பதாக ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் ஏலத் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் பயன்பாட்டிலிருந்து நீண்ட காலம் ஆன இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலத்தில் விட மாவட்ட காவல்துறை நிர்வாகம் முடிவெடுத்து இன்று ஏலம் நடத்தப்படுதாக அறிவித்த நிலையில், சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் ஜீப், டாடா சுமோ போன்ற நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர மோட்டார் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு ஏலம் விடப்பட்டது. ஆனால்,சந்தை விலைக்கு அதிகமாக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் வாகனங்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால் மறு தேதியிட்டு ஏலத்தை தள்ளி வைத்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!