ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் அகற்றம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த வீட்டு வசதி வசதி வாரியக்குடியிருப்புகள் பொகேலைன் மூலம் அகற்றப்பட்டது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடித்து அகற்றும் பணி தொடங்கியது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சேதமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் குடும்பத்திற்காக 48 அடுக்கு மாடி வீடுகளிகாலனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் 1986 மற்றும் 1991ல் 798 வீடுகள் கட்டப்பட்டன இந்தக் கட்டடங்களில் 250 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இதில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வந்தன. மதுபானக்கூடங்களுக்கு மாற்று இடமாக மாறிப்போனது. இதனை இடித்து அகற்றப்பட வேண்டுமென தொடர்ந்து சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது. கடந்த மாதம் 45 வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடித்து அகற்றப்பட்டது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சேதமடைந்த மற்ற அடுக்கு மாடி வீடுகள் அனைத்தும் இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu