குடியிருப்பு பகுதிக்குள் சடலத்தை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
சிவகங்கையில் குடியிருப்புகளுக்கு நடுவே சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு வாசிகள் ஜே.சி.பி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு பகுதிக்குள் சடலத்தை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஜே.சி.பி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கையில் குடியிருப்பு பகுதிக்குள் சடலத்தை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி இயந்திரத்தை சிறைபிடித்து பகுதி வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
சிவகங்கையின் விரிவாக்கப்பகுதியாக உள்ளது ரோஸ் நகர் பகுதி. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதன் நடுவே அரசு புறம்போக்கு இடம் 5 செண்ட் அளவுல் உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த நிலத்தினை அருகில் உள்ள கிறிஸ்தவ திருசபைக்கு கல்லறை அமைக்க வருவாய்த்துறையினர் ஒப்புதல் அளித்ததாக கூறப்படும் நிலையில், நேற்று அந்த திருச்சபையை சேர்ந்த நபர் ஒருவர் இறந்துவிடவே அவரது சடலத்தை அரசு சார்பில் வழஙகப்பட்ட இடத்தில் புதைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.
ஜே.சி.பி இயந்திரத்தினை கொண்டு குழிதோண்டும் பணி நடைபெற்றுவந்த நிலையில், குடியிருப்புகளுக்கு நடுவே சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு வாசிகள் ஜே.சி.பி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஏராளமாக குவிக்கப்பட்டதுடன் குடியிருப்பு வாசிகளிடம் டி.எஸ்.பி தலைமையில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தள்ளி புதைக்க அரசு ஒப்புதல் அளித்து அப்பகுதியில் சடலம் புதைக்கப்பட்டது. குடியிருப்புகளுக்கு நடுவே கல்லறை அமைக்க அரசு நிலம் வழங்கியதை கண்டித்து குடியிருப்பு வாசிகள் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu